jeyarajdeventhirar


K.P.ஜெயராஜ்தேவேந்திரர் அவர்கள் தமிழ்நாடு தேவேந்திரகுலவேளாளர் மகாஜன சங்கத்தின் நிறுவனரும் மாநில தலைவரும் ஆவார். 24/02/1966 ல் பிறந்த ஜெயராஜ்தேவேந்திரர் தான் பிறந்த சமுகமான தேவேந்திரகுலவேளாளர் சமுகத்தின் மீது பற்று உள்ளவர் ஆவார்.
தமிழ்நாடு தேவேந்திரகுலவேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.பசுபதிபாண்டியர் உடன் பழக்கம் ஏற்பட்டது
மேலும் பசுபதிபாண்டியர் நடத்தி வந்த அமைப்பின் விருதுநகர் மாவட்ட செயலாளராக 1997 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார். 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஶ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற வேட்பாளராக பசுபதிபாண்டியரால் ஜெயராஜ் தேவேந்திரர் அறிமுகம் செய்யப்பட்டார்.
ஜெயராஜ்தேவேந்திரர் தேவேந்திரகுலவேளாளர் சமுதாயத்தை சார்ந்தவராக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து சாதி சமயதினராலும் அறியப்பட்டவராகவே திகழ்ந்தார்.
2012 ல் பசுபதிபாண்டியரின் மறைவிற்கு பின் தேவேந்திரகுலவேளாளர் கூட்டமைப்பின் தலைவராக ஆத்தூர் ராஜேந்திரன் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு ஜெயராஜ்தேவேந்திரர் அவர்கள் கூட்டமைப்பின் மாநில இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சில வருடங்கள் கழித்து கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தனது ஆதரவாளர்களுடன் இணைந்து 2018ல் தமிழ்நாடு தேவேந்திரகுலவேளாளர் மகாஜன சங்கம் என்ற அமைப்பை நிறுவி தனது தலைமையில் வழிநடத்தி வருகிறார்.